Canadian High Commissioner Hon. Eric Walsh Visits Mullai Handloom Centre in Mullaithivu

On Tuesday, October 15th 2024, Canadian High Commissioner to Sri Lanka, Hon. Eric Walsh, visited the Mullai Handloom Centre, an initiative supported by the Canadian Tamil Congress (CTC). The Centre is located in the Puthukudiyiruppu village in the Mullaithivu district, one of the regions most affected by Sri Lanka’s civil war.
The centre, operated by the North and East Economic Development (NEED) Centre, currently trains 20 women from the area in the handloom industry. CTC’s Humanitarian Projects Coordinator for Sri Lanka, Mr. Thushyanthan R. Thurairatnam, and Mr. Piratheepan Sothylingam, Board Director at the NEED Centre, welcomed the Canadian High Commissioner and provided insights into the Centre’s operations and its positive impact on women in the region. The Mullai Handloom Centre is also supported by the sale of Mullai sarees at Tamil events in Canada, including Tamil Fest 2024.

The initiative was launched with the goal of empowering war widows and women affected by the war, providing them with financial independence and sustainable livelihoods. By building skills in handloom weaving, the project aims to create long-term, meaningful change for these women and their communities. The ultimate vision is to expand the reach of their products to the global market, offering continued support and economic opportunities for them in the future.

To commemorate his visit, High Commissioner Walsh planted a coconut tree at the Centre.

இலங்கைக்கான கனேடிய தூதுவர் கெளரவ எரிக் வால்ஷ் முல்லை கைத்தறி மையத்திற்கு வருகை தந்திருந்தார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கைக்கான கனேடிய தூதுவர் கெளரவ எரிக் வால்ஷ் முல்லை கைத்தறி மையத்துக்கு வருகை தந்திருந்தார். இந்த மையம் கனேடிய தமிழர் பேரவையின் (CTC) ஆதரவில் செயற்பட்டு வருகின்றது. இந்த மையம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட முள்ளைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு 20 பெண்கள் கைத்தறி துறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். இலங்கைக்கான CTCயின் மனிதாபிமானத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. துஷ்யந்தன் ஆர். துரைரத்னம் மற்றும் NEED மையத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் திரு. பிறதீபன் சோதிலிங்கம், கனேடிய தூதுவரை வரவேற்று இந்த கைத்தறி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் இது மக்களுக்குக் கொண்டு வந்துள்ள நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனர். முல்லை கைத்தறி மையத்தில் உருவாக்கப்பட்ட கைத்தறி புடவைகள் கனடாவில் நடைபெறும் தமிழ் விழாக்களில், குறிப்பாக 2024ஆம் ஆண்டு தமிழர் தெருவிழாவில் பெரும் ஆதரவை பெற்றிருந்ததோடு அதிக அளவில் விற்பனையாகியும் இருந்தது.

இத்திட்டம் போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆற்றல்மிக்கவர்களாக உருவாக்கி, அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தையும் நிலையான தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. கைத்தறி நெசவுத் துறையில் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்தப் பெண்கள் மற்றும் அவர்களுடைய சமூகங்களில் நீண்டகாலத்துக்கு தொடர்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்துவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில், இவர்களின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைக்கு விரிவுபடுத்துவதன் மூலம், அவர்களுக்கு தொடர்ந்த ஆதரவை வழங்கவும், அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவும் கனடிய தமிழர் பேரவை திட்டமிட்டுள்ளது.

கெளரவ எரிக் வால்ஷ் அவர்களின் இந்த வருகைக்கு சான்றாக கைத்தறி மையத்தில் தென்னை மரம் ஒன்றும் அவரால் நட்டுவைக்கப்பட்டது.

Subscribe to our newsletter