இனப்படுகொலை ஆவணப்படுத்தல் – கனேடிய தமிழர் தெருவிழாவில் முயற்சி” – தமிழர் தெருவிழா – 2019
அர்ச்சனா ரவிச்சந்திரதேவா விசேடமாக அமைக்கப்பட்ட சிறிய அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். யுத்தம் தொடர்பான கதையுடன் ஒருவர் அவரை அணுகுகிறார்.
அவரின் சகோதரர் இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்டார். தனது சகோதரரின் இறப்பு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.
அவருக்கு ஒரு படிவம் கொடுக்கப்படுகிறது. அதில் இறந்துபோன அவரது சகோதரரின் பெயர், பிறந்த ஆண்டு, திகதி மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டது.
இந்தத் தகவல்கள் இலங்கைப் போரில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை மதிப்பிடுவதற்காக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழுவிடம் ( HRDAG ) வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இலங்கைப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அர்ச்சனாவும் அவருடன் இணைந்த தன்னார்வலர்கள் குழுவும் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வருடந்தோரும் அதிகளவில் ஒன்றுகூடு;ம் கனேடிய தமிழர் தெருவிழாவுக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழுவை அழைத்து வருவதற்காக அந்த அமைப்புடன் இவ்வாண்டு ஆரம்பத்தில் கனேடிய தமிழ் கொங்கிறஸ் தொடர்புகொண்டது.
அர்ச்சனா இன்னும் சில தன்னார்வலர்களுடன் இணைந்து வார இறுதியில் இடம்பெறும் தமிழர் தெருவிழாவில் வைத்து போரில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் தகவலகளைத் திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
‘யுத்தத்தில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி அவற்றை பாகுபாடற்ற, சுயாதீனமான அமைப்பிடம் கையளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழுவின் ஆலோசகர் மைக்கேல் டுகிச் கூறினார்.
1983 முதல் 2009 வரை நீடித்த இலங்கை யுத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பான பெருமளவு முரண்பட்ட தகவல்களே உள்ளன.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்ததாக பெரும்பாலான தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இறுதி யுத்தத்தின் ஐந்து மாத காலப்பகுதியில் ; 40,000 முதல் 70,000 வரை பொதுமக்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர் இனப்படுகொலையை செய்ததாக யுத்தம் முடிவடைந்தத காலப்பகுதியில் இருந்து மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
1970களில் அமைக்கப்பட்ட சர்வதேச தீர்ப்பாயமான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக அறிவித்தது.
எனினும் போரில் பொதுமக்கள் இலக்குவைக்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்தது வருகிறது.
இந்நிலையில் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழுவின் ஆலோசகர் மைக்கேல் டுகிச், அர்ச்சனா ரவிந்திரதேவா ஆகியோர் தன்னார்வலர்களாக இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் தொகையை மதிப்பிடும் பணியை முன்னெடுத்தனர்.
1998 ஆம் ஆண்டில் தாயார் இலங்கையை விட்டு வெளியேறியபோது அர்ச்சனாவும் அவருடன் கனடா வந்தார். கனடாவில் அவர் வளர்ந்தார்.
தனது தமிழ் நண்பர்கள் பலரும் பெற்றோருடன் மோதலைப் பற்றி பேச முடியவில்லை என்றாலும் தனது பெற்றோர் போரின் கதைகளை அடிக்கடி சொல்வதை அர்ச்சனா கேட்டார்.
‘நாங்கள் கனடாவில் நல்ல முறையில் வாழ்ந்து, வளர்ந்து வருகிறோம். ஆனால் கடந்த காலத்தைப் பற்றி பேசவும், இளைய தலைமுறையினருடன் கடந்த கால கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் தயக்கம் காட்டுகிறோம்.
கடந்த காலத்தைப் பற்றி எமது சமூகம் விவாதித்து நீதி மற்றும், பொறுப்புக்கூறலை கோருவதற்கு இவ்வாறான தகவல்களை பரிமாரிக்கொள்வது உதவும் என்கிறார் அவர்.
மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு போன்ற குழுக்கள் தனிப்பட்ட சாட்சியங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடம் பெற்றுக்கொள்ளும் தரவுகளின் மூலம் வலுவான தரவுத்தளங்களை தொகுக்க முடியும்.
எனினும் விபரங்கள் எல்லாவற்றையும் முழுமையாகம் தொகுத்தல் அடுத்தகட்ட சிரமம் என்கிறார் மைக்கேல் டுகிச்.
தகவல் திரட்டப்படும்போது கொல்லப்பட்டவர்கள் பெயர்கள், அவர்கள் குண்டுவீச்சில் இறந்தார்களா? அல்லது கலவரத்தில் இறந்தார்களா? என்பது போன்றன உள்ளி;ட்ட விரிவான தகவல்கள் பெறப்பட வேண்டும்.
ஒரு கிராமத்தில் இடம்பெற்ற குண்டுவீச்சில் 200 அல்லது 300 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் இறந்தவர்களின் பெயர்கள் அந்தத் தகவலில் இல்லை.
தமிழர் திருவிழா போன்ற நிகழ்வுகள் இவ்வாறான தகவல் திரட்டுக்களை ஆரம்பிக்க ஒரு நல்ல தளம் எனவும் மைக்கேல் டுகிச் தெரிவித்தார்.
உதாரணமாக, குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் கொலை தொடர்பான தகவல்கள் நிறைந்த இரண்டு புத்தகங்களைத் தொகுத்த ஒரு நபரை மைக்கேல் டுகிச் கடந்த சனிக்கிழமையன்று சந்தித்தார்.
தனது தரவுத்தளத்தை சரிபார்க்கும் முன்னர் அந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க உதவுமாறு கனேடிய தமிழ் கொங்கிரஸை டுகிச் கேட்டுக்கொண்டார்.
நான் உட்பட இங்குள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் குறித்து அறிந்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் சோகமான, உணர்ச்சிகரமான விடயம் என்கிறார் கனேடிய தமிழ் கொங்கிரஸ் முன்னாள் பணிப்பாளர் குமார் ரட்ணம்.
எனினும் இதுபோன்ற தகவல்களைத் திரட்டுவது எங்களுக்கு மிக மிக முக்கியமானது எனவும் அவர் கூறுகிறார்.