Anbudan Thamil – To Tamil with Love
அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய காதலர் நாளில், கனேடியத் தமிழர் பேரவை “அன்புதான் தமிழ் – தமிழ் மீதான காதல்” என்ற தமிழ் இசை நிகழ்ச்சியை நடத்த உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ்க் கலைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதை அறியத் தருகிறது.
பெப்ரவரி 28, 2021 அன்று, ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் திட்டத்தை ஆதரிப்பதற்காக உலகளாவிய ரீதியில் தமிழ்ப் பாடகர்கள் பங்கெடுக்கும் ஓர் அற்புதமான இசை நிகழ்ச்சி இணைய மூலம் நிகழவுள்ளது. அன்பினால் கட்டுண்டவர்கள் ஆனந்தத் தமிழிசை பருகி உலக அரங்கில் தமிழை நிலைநிறுத்திட உதவிடுவீர்!
ரொறொன்ரோ தமிழ் இருக்கைத் திட்டம், கனடாவில் முதன்முதலாக ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான இலட்சிய முயற்சியாகும். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் இந்தத் தமிழ் இருக்கை, உலகின் அதிதொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் வளர்ச்சியையும் இருப்பையும் தொடர்ந்து பேண உறுதி செய்யவல்லது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அடைய வேண்டிய இலக்கு மூன்று மில்லியன் கனடிய டொலர்கள் ஆகும். இன்னும் 500,000 கனடிய டொலர்கள் சேர்க்கப்பட்டால் அந்த இலக்கினை நாம் அடைந்துவிடுவோம்.
நீங்கள் தமிழ் மொழியை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த இலட்சிய நோக்கை நிறைவேற்ற நிதியுதவி அளியுங்கள்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பு நேரடியாகவே ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துக்கானது.
தயவுசெய்து இத்திட்டத்திற்கான உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்க
CTC @ 647-300-1973 / dantont@
அன்புடன்,
தமிழ்